சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ரிலீஸாக உள்ளதால், ரசிகர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டுள்ளனர். நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ரஜினிக்கு வெறித்தனமான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஜெயிலர் படத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. முதல் நாள் மட்டுமின்றி வரும் 15ம் தேதி வரை ஜெயிலர் டிக்கெட்டுகள் முழுவதுமாக புக்கிங் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தப் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸிலும் மிகப் பெரிய ஓபனிங் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் ரஜினியின் வீடியோக்கள், அவரது பஞ்ச் டயலாக், செம்ம மாஸ்ஸான போஸ்டர் ஆகியவைகளை வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் போஸ்டர் ஒன்றில் வெளியான ரஜினியின் மிரட்டலான லுக் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. ரஜினி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்று முகம். ரஜினி மூன்று கெட்டப்புகளில் நடித்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
முக்கியமாக இந்தப் படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர், ரஜினியின் கேரியரில் கோல்டன் ஐக்கானாக அமைந்தது. அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டரில் ரஜினியின் நடிப்பும், பஞ்ச் வசனங்களும் ரசிகர்களை தெறிக்கவிட்டன. தற்போது அதே அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் லுக்கில் ஜெயிலர் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
ஆனால், இது ரஜினி ரசிகர்களால் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் தான் என்றும், ஜெயிலரில் இப்படியொரு கெட்டப் கிடையாது எனவும் சொல்லப்படுகிறது. ஜெயிலரில் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் தான் ரஜினி நடித்துள்ளார். அதனால், ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கேரக்டர், மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!