பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராகதிகழ்பவர் தான் ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர்.
மேலும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது என்று தான் கூற வேண்டும்.சமீபத்தில் இவர் நடித்த Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. அத்தோடு ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகின்றார்.
அத்தோடு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பீர் - ஆலியாபட் ஜோடி ஒரு மாதம் முன்பு திருமணம் செய்தனர். மும்பை செம்பூரில் உள்ள ரன்பீர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. மேலும் நெருங்கிய சினிமாத்துறை நண்பர்க்ள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டனர்.
திருமணமாகி ஒரு மாதம் ஆவதையொட்டி ரன்பீர்-ஆலியா ஜோடி கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுத்த புகைப்படங்களை ஆலியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கோர்ட் சூட்டில் ரன்பீர் கொண்டாட்டத்தில் காட்சியளிக்கிறார். கையில் மெஹந்தியுடன் ஆலியா தோன்றியுள்ளார்.
மேலும் ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா படத்தில் நடிக்கிறார். லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.
- பிறசெய்திகள்:
- அடுத்தடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ்
- விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடிக்கும் விக்ரம்…யார் இயக்கம் தெரியுமா..!
- விக்ரம் ஆடியோ லாஞ்சில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்
- உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலித்த RRR திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா..?
- நயன்தாராவுக்காக கதை எழுதும் பிரபல நடிகர்-அட இவரா..?
- டான் படம் இரண்டாவது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!