• Nov 10 2024

'பட்' உடன் கபூரை இணைக்கும் ஆலியா.... என்ன இது புதுக்கதையாய் இருக்கு... காரணம் இதுவா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் ஒருவர் ஆலியா பட். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக நயன்தாரா வலம் வருவதை போன்று இவரும் பாலிவுட் இளைஞர்கள் பலரின் கனவு நாயகியாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாது சமீப காலங்களில் தொடர்ந்து பல ஹிந்தி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அந்த அளவிற்கு திரையுலகில் பிரபல்யமாகி இருக்கின்றார்.




இவர் நடிப்பில் உருவாகும் ஏராளமான படங்கள் இன்றுவரை வெற்றிக் கனியை சுவைத்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இந்த ஆண்டு ‘ RRR, கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் சமீபத்தில் வெளியான 'டார்க் காமெடி டார்லிங்ஸ்' உள்ளிட்ட மூன்று வெற்றிப் படங்களைப் பெற்ற ஒரே பாலிவுட் நடிகை என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றார் ஆலியா பட்.



இவ்வாறாக படங்களில் பிசியா இருந்து வருகின்ற இவர் இந்த ஆண்டு ஏப்ரலில், பல வருட டேட்டிங்கிற்குப் பிறகு ரன்பீர் கபூரை மணந்தார். தற்போது இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்கக் காத்திருப்பதோடு ​​வாழ்க்கையின் புதிய மற்றும் அற்புதமான கட்டத்தைத் தொடங்கவும் தயாராகி விட்டார்கள்.


இந்நிலையில் ஆலியா பட் விரைவில் சட்டப்பூர்வமாக தனது பெயரை ஆலியா பட் கபூர் என மாற்றப் போவதாக ஆலியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கணவர் ரன்பீர் கபூர் தனது கடவுச்சீட்டில் தன்னுடைய திருமண நிலையை உடனடியாக மாற்றியதாகவும், திருமணத்திற்குப் பிறகு தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலை உறுதிப்பாடுகள் காரணமாக அதைச் செய்வதற்கான நேரம் தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.



மேலும் ஆலியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் இருந்தார். தனது முதல் ஹாலிவுட் திட்டமான ஹார்ட் ஆஃப் ஸ்டோனின் ஷூட்டிங்கில் கால் கடோட் மற்றும் ஜேமி டோர்னனுடன் இணைந்து நடித்தார். அத்தோடு ஆலியா கபூர் குடும்பப் பெயரை சேர்ப்பது தொடர்பில் "நான் அதைச் செய்வேன் . இவை அனைத்தையும் நான் சேர்க்க வேண்டும். அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 


விரிவாகச் சொன்னால் நாங்கள் இப்போது ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம். கபூர்கள் ஒன்றாக பயணம் செய்யும் போது, ​​நான் பட் ஆக விரும்பவில்லை" எனவும் கூறிருக்கின்றார். அத்தோடு ஆலியா தனது திரைப் பெயரை  என்றுமே மாற்றப் போவதில்லை என்றும் உறுதியாகக் கூறியிருக்கின்றார். 

Advertisement

Advertisement