• Nov 10 2024

திடீரென விஜய் டிவியை விலை பேசிய 3 பிரம்மாண்ட நிறுவனங்கள்..காரணம் என்ன தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மிகவும் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்கள், ரியாலிட்டி ஷோ மற்றும் பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. சன் டிவிக்கு நிகரான இடத்தை விஜய் டிவி தொலைக்காட்சி தக்க வைத்துக் கொண்டது.

அப்படிப்பட்ட இந்த தொலைக்காட்சியை தற்போது திடீரென்று விற்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால்.

குறிப்பிட்ட ரேட்டிங்க்கு சேனல் பெருசாக போகவில்லை. அதனாலேயே டிஆர்பி மங்கிப் போய்விட்டது. இதனால் தற்போது இந்த தொலைக்காட்சியை விற்பதற்கு முடிவெடுத்து விட்டார்கள். ஏற்கனவே ஸ்டார் குழுமம் இந்த தொலைக்காட்சியை வாங்கிய பிறகு ஸ்டார் விஜய் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வந்தது டிஸ்னி நிறுவனம். இப்பொழுது இவர்கள் ஹாட்ஸ்டார் தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை விற்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள். இந்த செய்தியை இவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.

அதனால் இந்த தொலைக்காட்சியை வாங்குவதற்கு இப்பொழுது மூன்று நிறுவனங்கள் தயாராக வருகிறது. அதில் ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம். இந்த நிறுவனங்களில் யார் அதிக தொகை கொடுத்து வாங்கப் போகிறார் என்பது கடும் போட்டியில் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஜியோ நிறுவனம் 1000 கோடிக்கு விலை பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்படியாவது விஜய் டிவி தொலைக்காட்சியை வாங்கியே ஆக வேண்டும் என்று முன்னிலை வகித்து வருவது ஜியோ நிறுவனம் தான். இவர்களிடம் ஏற்கனவே ஓடிடி இருப்பதால் விஜய் டிவி தொலைக்காட்சியும் வாங்கி விட்டால் இவர்களுடைய பிசினஸ் இன்னும் டபுள் மடங்கு லாபத்தை பெறலாம். அதனால் கண்டிப்பாக ஜியோ நிறுவனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Advertisement

Advertisement