2007ம் ஆண்டு வெளியான சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்த்த இயக்குநர் ஷங்கர் உட்பட பலரும் ஓடவே ஓடாது என நினைத்துள்ளனர். ஆனால், சென்னை 28 படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதில் அஜித் நடித்த மங்காத்தா ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதேபோல் 2021ம் ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படமும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து மன்மத லீலை, கஸ்டடி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் 2 கதைகள் கூறியிருந்தாராம் வெங்கட் பிரபு.
லிங்கா படத்தின் தோல்விக்குப் பின்னர் இளம் இயக்குநர்களுடன் இணைய முடிவெடுத்தார் ரஜினி. அதன்படி, பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏஆர் முருகதாஸ், சிறுத்தை சிவா ஆகியோரின் படங்களில் நடித்த சூப்பர் ஸ்டார், தற்போதும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
முன்னதாக தலைவர் 170 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் தேசிங் பெரியசாமி, சிபி சக்ரவர்த்தி, வெங்கட் பிரபு என பலரது பெயர்களும் அடிபட்டன. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு ரஜினிக்காக இரண்டு கதைகள் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த இரண்டு கதைகளும் பிடித்திருந்ததாம். ஆனாலும் அவர் வெங்கட் பிரபுவுக்கு நோ சொல்லிவிட்டதாக தெரிகிறது.
ரஜினிக்காக வெங்கட் பிரபு சொன்ன இரண்டு கதைகளும் அரசியல் பின்னணியில் எழுதப்பட்டதாம். ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக பில்டப் செய்துவிட்டு அதிலிருந்து பின்வாங்கிவிட்டார் . இந்த சூழலில் பொலிட்டிக்கல் ஜானர் படத்தில் நடித்து மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என பின்வாங்கிவிட்டாராம் ரஜினி.
அதன்பின்னர் இதே கதைகளை விஜய்யிடம் கூறியுள்ளார் வெங்கட் பிரபு. விஜய்யும் கடந்த சில வருடங்களாகவே அரசியல் வைப்ரேஷனில் இருந்து வருகிறார். அதனால், இந்த கதை நமக்கு செட்டாகும் என வெங்கட் பிரபுவை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், ரஜினிக்காக எழுதிய கதையில் தான் விஜய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தேசிங் பெரியசாமி ஒரு கதை எழுதியிருந்தார். அதில் ரஜினி நடிக்கவில்லை என்றதும் தான் அந்த கதை சிம்புவுக்காக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், ரஜினிக்காக சிபி சக்ரவர்த்தி எழுதிய கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுகுறித்து அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!