• Nov 19 2024

'நீ ஒன்றும் செய்யாமல் பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டு போனாலே போதும்'- நடிகர் வினய் சொன்ன ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தாலும் சமீபகாலமாக நெக்கட்டிவி ரோல்களில் நடித்து பிரபல்யமான நடிகர்களும் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர்தான் நடிகர் வினய். இவர்ஜெயம்கொண்டான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, அரண்மனை போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இருப்பினும் இப்படங்களின் மூலம் சிறந்ததொரு அடையாளத்தை இவரால் பெறமுடியவில்லை. இதனையடுத்து துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வினய் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். நடிகர் சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் மிரட்டியிருப்பார்.

அதேபோல் நடிகர் விஜயகுமார், அருண் விஜய், ஆர்ணவ் விஜய் மூவரும் இணைந்து நடித்த ஓ மை டாக் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுபோல் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு இதில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடித்த உன்னாலே உன்னாலே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக உன்னாலே உன்னாலே, ஜூன் போனால் பாடல்கள் மிகவும் பிரபலமானது.

சென்னை சிட்டி சென்டரில் எடுக்கப்பட்ட உன்னாலே உன்னாலே பாடல் ஒவ்வொரு பிரேமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக மொட்டை மாடியில் அனைத்து டான்ஸ்சர்கள் ஆடிக் கொண்டே நகரும் பொழுது, வினய் மட்டும் விசிலடித்துக் கொண்டே நடந்து செல்வார்.

இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், பார்ப்பதற்கு அழகாகவும் அமைந்திருக்கும். இந்த சீனை பற்றி நடிகர் வினய் மனம் திறந்து கலகலப்பாக பேசியுள்ளார். அந்த சீனை படமாக்கும் பொழுது அனைத்து டான்ஸர்கள் ஒவ்வொரு ஸ்டெப் போட்டுக் கொண்டே நடந்து செல்வார்கள், நான் என்ன ஸ்டெப் போடவேண்டும் என்று நடன இயக்குநர் ராஜு மாஸ்டரிடம் கேட்டபோது நீ ஒன்றும் செய்யாமல் பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டு நடந்து சென்றால் போதும் என்று சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement