பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா பட். இவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் பிரம்மாஸ்திரா. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவடைந்து தற்பொழுது அதன் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா பட், என்னை பிடிக்கவில்லை என்றால் என்னுடைய படத்தை பார்க்காதீர்கள் என திமிராக பேசியுள்ளது தான் தற்போது அப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் இந்த பேட்டியை டிரெண்ட் ஆக்கி வரும் நெட்டிசன்கள் பாய்காட் பிரம்மாஸ்திரா என்கிற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் படக்குழு கலக்கம் அடைந்துள்ளது. பிரம்மாஸ்திரா ரூ.500 கோடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படமாகும். இப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
தற்போது ஆலியா பட்டின் இந்த பேச்சால் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை பிரம்மாஸ்திராவுக்கு ஏற்பட்டுவிடுமோ என படக்குழு கலக்கம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Alia Bhatt : If u don't like me don't watch me I can't help it
We will all fulfill her wish too
Let's make #Brahmastra 500Cr FLOPBUSTER
We are just tickets buyers for them. They only need your money not you. #BoycottBrahmastra #BoycottBollywood pic.twitter.com/IJ8u9NWxXy
Listen News!