• Sep 20 2024

பிரபல நடிகருடன் இணைந்து... புதிய படத்தில் கமிட்டான ஐஸ்வர்யா மேனன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'தமிழ் படம் 2' என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால், வேழம், தமிழ் ராக்கர்ஸ்' போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.


அத்தோடு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் 'ஸ்பை' எனும் படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன்  நடிக்கிறார்.


இவ்வாறாக பல படங்களிலும் ஒப்பந்தமாகி தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற ஐஸ்வர்யா மேனன் தற்போது மற்றுமோர் படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கின்றார். அதாவது மம்முட்டியின் புதிய பெயரிடப்படாத மலையாளப் படம் ஒன்றில் இணைந்துள்ளதா தகவல் வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement