தனது ரசிகர் ஒருவரிடம் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலங்களில் காதல் மன்னனாக இருந்து வந்த நடிகர் தான் அஜித்.இவர் தனது நடிப்பினாலும் இயல்பான நடையினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத்துடன் இணைந்து ஏ.கே 61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் வலிமை பட தாயாரிப்பாளரான போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் அஜித் உலகச்சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
அவர் லடாக்கில் இமயமலையின் பல முக்கிய இடங்களில் சென்று இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
அஜித் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் அஜித் இருந்த ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆனது.இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சிலரிடம் பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. பைக் ட்ரிப் வந்திருக்கும் ரசிகர்கள் சிலர் அவரை பார்த்து பேசி இருக்கின்றனர்.
உங்களை மூன்று நாட்களாக தேடிக்கொண்டிருந்தோம் என ரசிகர் சொல்ல, 'தேடிட்டு இருந்தீங்களா.. நான் என்ன கொலைகாரனா இல்ல கொள்ளைக்காரனா?' என அஜித் கேட்கிறார்.
'இல்லை சார்.. உங்களை பார்ப்பதற்காக' என ரசிகர்களும் கூற, அதன் பின் அவர்கள் விவரங்களை கேட்டு அஜித் அவர்களிடம் உரையாடும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
இதோ
#Ajith sir ❤️😍#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ
Listen News!