• Nov 19 2024

நான் வடிவேலுவை நம்பி இருப்பதற்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிறேனா?- கொந்தளித்த பிரபல காமெடி நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை

பல காலமாக வடிவேலுவுடன் நடித்த சக காமெடி நடிகர்களான போண்டா மணி, முத்துக்காளை, சிங்கமுத்து ஆகிய எந்த நடிகரும்,  “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் இடம்பெறவில்லை. சிவாங்கி, ரெடின் கிங்க்ஸ்லி, இட்ஸ் பிரசாந்த் போன்ற தற்காலத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் நடிகர்கள்தான் அத்திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.


 வடிவேலு பழைய ஃபார்மில் இல்லை எனவும் ஆதலால்தான் இத்திரைப்படம் தோல்வியடைந்தது எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்த முத்துக்காளை சில நாட்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் தோல்வி குறித்து பேசியபோது “விதி தன் வேலையை செய்திருக்கிறது” என்று கருத்து கூறினார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் மற்றொரு பேட்டியில் கலந்துகொண்ட முத்துக்காளையிடம் நிருபர் “உங்களுக்கு வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால்தான் அவரை விமர்சிக்கிறீர்கள் என்று வடிவேலு ரசிகர்கள் கூறுகிறார்களே. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என கேட்டார்.அதற்கு பதிலளித்த முத்துக்காளை “நான் ஏதோ பட வாய்ப்பு இல்லாமல் அடுத்த வேளை சாப்பிட்டிற்கு கூட வழி இல்லாமல் அடுத்தவர்களை சார்ந்து இருப்பது போல சொல்கிறார்கள். நான் கிட்டத்தட்ட 250 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.


அதில் 50 திரைப்படங்களில்தான் வடிவேலு அண்ணனுடன் நடித்திருக்கிறேன். அவர் கூட நடித்தவர்கள் எல்லாம் இப்போது நல்ல செட்டில் ஆகியிருக்கிறார்கள். அவர் கூட நடித்த காலத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் என்ன கொள்ளையடித்தார்களா? அல்லது பிச்சையெடுத்தார்களா? அவரவர்களுக்கு ஒரு திறமை இருக்கிறது” என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement