மலையாளத்தில் வெளியான நீலத்தாமரை என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் அமலாபால். இதனைத் தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி என்னும் படத்தில் ஹரிஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து மைனா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மைனா திரைப்படம் தான் இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது இதனை அடுத்து தெய்வ திருமகள் ,வேட்டை ,காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனை ,தலைவா ,வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இது தவிர தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகின்றார். சில காலம் தனிப்பட்ட பிரச்சினையால் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக கடாவர் என்னும் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் அவர் பிரேத பரிசோதனை டாக்டராக நடித்திருப்பார் என்பது அறிந்ததே
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே பிரேத பரிசோதனையை பார்த்தேன் என்றும் இதற்காக இயக்குனருடன் பல மருத்துவமனைகளில் சென்றேன் என்றும் பேட்டி ஒன்றில் நடிகை அமலாபால் கூறியுள்ளார்
மேலும் இந்த படத்தின் மூலம் பல மருத்துவ ஆய்வுகளை நான் கற்றுக் கொண்டேன் என்றும் குறிப்பாக பிரேத பரிசோதனை செய்வதில் உள்ள நுணுக்கங்களை பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்
கடாவர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் நானும் என்னுடைய குழுவினரும் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது என்றும் அமலாபால் பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!