பிரபல தமிழ் சினிமா நடிகர் சங்கர் ‘அம்பானி சங்கர்’ என்ற திரைப் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றார்.
தமிழ் சினிமாக்களில் பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர் அம்பானி சங்கர்.
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்ததன் பின்னர் இந்த பெயரால் அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜியோ நிறுவனம் தொடர்பான ஒரு புகாரை டிவிட்டரிலு் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அத்தோடு அதில் அம்பானி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் பெயரையும் டேக் செய்துள்ளார். அப்போது அம்பானி சங்கர் என்ற பெயரில் டிவிட்டரில் இருந்த சங்கரையும் டேக் செய்ய, பதறிப் போன சங்கர் “டிவிட்டர்ல வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தை சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய tag பண்றாங்க” என்று ட்வீட் செய்ய அது மீம்களாக இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!