• Sep 20 2024

அம்பி, ரெமோ, அந்நியன்.. ஆக்டிங்கில் பிரித்து மேய்ந்த விக்ரம் ..இன்றுடன் 18 ஆண்டுகள் பூர்த்தி ..உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர்கள் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது.

 தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் பின்னர், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது. பிரான்சில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் அந்நியன் படத்திற்கு உண்டு.இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருந்தார்.

 

 இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 18 ஆண்டுகளை கடந்துள்ளது. குறைவான பட்ஜெட்டில் நிறைவான படத்தை கொடுத்திருந்த இயக்குநர் ஷங்கர், இத்தகைய படங்களின் மூலம்தான் தன்னை முன்னணி இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்ததையொட்டி படத்தின் நடிகர் விக்ரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். நம் எல்லாருக்குள்ளயும் இருக்கான்ல, ஒரு அந்நியன் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 18 yrs of anniyan என்ற டேக்கையும் இணைத்துள்ளார். லவ் எமோஜியையும் இணைத்துள்ளார். மேலும் அந்நியன் படத்தின் வீடியோ ஒன்றையும் இந்த பதிவில் அவர் சேர்த்துள்ளார்.

 18 ஆண்டுகளை பூர்த்தி செய்த அந்நியன் படத்தின் கொண்டாட்டத்திற்கும் பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை கவரும் விஷயமாகவே அமைந்துள்ளது.


Advertisement

Advertisement