பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டு 45 நாட்களைக் கடந்து விட்டது. எனவே இந்த வாரம் டாஸஸ்க்காக நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. வழமையாக டாஸ்க் என்றாலே சண்டை நடக்கும்,ஆனால் இந்த வாரம் நல்ல காமெடியாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 45ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.“
அதாவது நேற்றைய தினம் பாதியில் விடப்பட்ட லட்ஜரி பட்ஜெட் டாஸ்க்கான அமுதவாணன் மற்றும் ராபேர்ட் மாஸ்டரின் டாஸ்க் நடைபெற்றது. இதில் மாஸ்டர் வெற்றி பெற்று 400 லட்ஜரி பட்ஜெட் புள்ளியினைப் பெற்றார். இதன் பின்னர் ஜனனி, விக்ரமனுக்கு எதிராக ஒரு வழக்கினைத் தொடர்ந்திருந்தார்.
அதாவது விக்ரமன் தன்னுடைய தமிழைப் பற்றிப் பேசியதாகவே வழக்குத் தொடர்ந்தார். இதில் ஜனனிக்கு சார்பாக அசீமும் விக்ரமனுக்கு சார்பாக குயின்சியும் வாதாடினார்கள். இதில் குயின்சி அணி வெற்றி பெற்றது. இதனால் வெளியில் வந்த ஜனனி ஷிவினிடம் அசீம் ஒரு வழக்கை எடுத்து நடத்தினாலே அதுக்கு எதிராகவே எல்லாரும் எப்போதும் கருத்து சொல்கின்றார்கள் என்று புலம்பினார்.
இதனை அடுத்து தனலக்ஷ்மி அசீம் வீட்டிலுள்ள பழங்கள் மற்றும் தயிர்களை எடுத்து உண்டு வருகின்றார் என வழக்குத் தொடர்ந்தார். இதில் அசீமுக்கு ஆதரவாக ஜனனியும் தனலக்ஷ்மிக்கு ஆதரவாக கதிரவனும் வழக்காடினார்கள். இதில் அசீம் டீம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து ஆயிஷா மற்றும் குயின்சி ஆகியோர் ஷிவினை ப்ராங் செய்து கொண்டிருந்தார்கள். இதில் கொஞ்சம் கடுப்பான குயின்ஷி கோபத்தில் வேகமாக செல்லும் போது அவர் கைபட்டு பொம்மை ஒன்று கீழே விழுந்து உடைஞ்சிருச்சு. இதனால எல்லா காமெரா முன்னாடியும் போய் மன்னிப்புக் கேட்குமாறு பிக்பாஸ் கூறுகின்றார்.
இதனை அடுத்து கதிர் தொடுத்த வழக்கு ஒருவர் மீது மட்டும் தொடர முடியாது என்பதால் ஜனனி, அமுதவாணன், அசீம், ராபர்ட் மாஸ்டர், தனலக்ஷ்மி ,ராம் ஆகியோர் மீது இந்த வழக்குத் தொடரப்படுகின்றது.அதாவது சாப்பிட்ட தட்டுகள் மற்றும் கிளாசுகளை யார் கழுவாமல் வைக்கின்றார்கள் என்பதே இந்த டாஸ்க் ஆகும். இந்த டாஸ்க்கிற்காக ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.
Listen News!