நடிகை அம்மு அபிராமி காதலில் விழுந்து விட்டதாகவும் அவர் குக் வித் கோமாளி பிரபலத்தை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’பைரவா’ என்ற திரைப்படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அம்மு அபிராமி, அதன் பின்னர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தார். ’ராட்சசன்’ படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் ’அசுரன்’ படத்தில் தனுஷ் காதலியாக வந்து கலக்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வரும் நிலையில் பிசியான ஒரு நடிகையாக மாறிவிட்டார். அம்மு அபிராமி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் காரணம் என்றும் அந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்பான முறையில் செயல்பட்டதை அடுத்து ரசிகர்கள் குவிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் அவருக்கு வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபனுடன் அம்மு அபிராமி காதலில் விழுந்து விட்டதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அம்மு அபிராமி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இயக்குனர் பார்த்திபன் அபிராமியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’குணா’ பாணியில் ’அபிராமி அபிராமி ’என்று உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உன்னை போன்ற இனிமையான ஆன்மாவுக்கு புன்னகை நிறைந்த பல முகங்கள் வாழ்த்துகிறார்கள், எப்போதும் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அம்மு அபிராமியும் ‘தேங்க்ஸ்’ என்று பதில் அளித்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி உள்ள நிலையில் இது குறித்து இருவரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!