• Nov 10 2024

இரண்டாவது திருமணம் பண்ணிய அமிர்தா... உண்மையை அறிந்த முதல் கணவன்... இனி எடுக்கப் போகும் முடிவு என்ன...? பரபரப்பான கட்டத்தில் 'Baakiyalakshmi'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் அமிர்தாவின் முதல் கணவன் அமிர்தாவை தேடி அலைகின்றார். முன்னர் அமிர்தா குடி இருந்த இடத்திற்குச் சென்று விசாரிக்கின்றார். அவர்கள் அந்தப் பொண்ணு வீடு காலி பண்ணி போயிடிச்சு எனக் கூறுகின்றனர்.


பின்னர் அமிர்தாவின் நண்பி பூரணியை சந்தித்து அமிர்தா பற்றிக் கேட்கின்றார். பூரணியும் அமிர்தா மறுமணம் செய்து விட்டார் என்ற உண்மையைக் கூறுகின்றார். இதனையடுத்து அமிர்தாவின் முதல் கணவன் அதிர்ச்சியில் அழுது கொண்டு செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement