• Sep 21 2024

உயிருடன் வந்த அமிர்தாவின் முன்னாள் கணவன் - இனி நடக்க போவது என்ன? யாரும் எதிர்பாக்காத திருப்பங்களுடன் Baakiyalakshmi Serial!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் திடீர் திருப்பங்களுடன் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதனை இங்கு பார்ப்போம்.


அமிர்தாவின் முன்னாள் கணவனனான கணேஷ் இறந்து விட்டதாக கருதப்படும் நிலையில் உயிரோடு வீட்டிற்கு வருகிறார்.இதனை கண்டு அவரது அம்மா,அப்பா பேரதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறர்கள்.


அதாவது கணேஷின் அப்பா ,அம்மா நினைவு நாளிற்கு புகைப்படத்தை வைத்து மாலை போட்டு,படையல் வைக்கிறார்கள்.அந்த நேரத்தில் கணேஷ் வீட்டிற்கு வருகிறார். ''நான் உயிருடன் தான் அம்மா இருக்கிறன் என்று கூற கட்டிப்பிடித்து சந்தோசத்தில் கதறுகிறார்கள்.


பின்பு கணேஷ் வீட்டிற்கு வந்தவுடனேயே அமிர்தா எங்கே என தேடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் கணேஷின் அப்பா,அம்மா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள்.இனி என்ன நடக்க போகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement