• Nov 19 2024

நான் எதுக்கு அசலை ஷேவ் பண்ணனும்... அமுதவாணனை புட்டுப் புட்டு வைக்கும் நிவாஷினி... வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனானது ஆரம்பமாகி தற்போது 6ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான் அசல் கோளார். இவர் அங்குள்ள சக பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷம் செய்வதில் எல்லை மீறி நடந்து கொள்கிறார்.

அதுமட்டுமல்லாது நிவாஷினியை கட்டிப்பிடித்த போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதன் காரணமாக குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 


இந்நிலையில் தற்போது நிவாஷினியின் மற்றுமோர் வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் அமுதவாணனனை பல வகையிலும் குறை கூறிட்டு இருக்கின்றார். அதாவது அசல் கோளார் இருக்கும் போது நடந்த விஷயங்களை திரும்ப எடுத்துப் பேசுகின்றார்.

அதில் "அமுதவாணன் எப்படி நான் அசலை தான் ஷேவ் பண்ணுவேன் என்று கூற முடியும், நான் குயின்ஷியைக் கூட ஷேவ் பண்ணி இருப்பேன், முதலில நான் எதுக்கு அசலை ஷேவ் பண்ணனும், அசலை விட குயின்ஷி தான் என்னுடன் குளோஸ். அவர் நான் இந்த வீட்டுக்குள் வந்த முதல் நாளிலேயே நல்ல ஒரு பிரண்டாக இருந்திருக்கின்றார்" என்றார்.


மேலும் அமுதவாணனின் சில சில நடவடிக்கைகள் தனக்குப் பிடிக்கவில்லை எனவும் கூறுகின்றார். அவர் எதுக்கு எனக்கு அட்வைஸ் பண்ணனும், எனக்கு அது புரியல எனவும் கூறி இருக்கின்றார் நிவாஷினி. அதுமட்டுமன்றி அமுதவாணன் குறித்த பல விஷயங்களையும் புட்டுப் புட்டு வைத்திருக்கின்றார் நிவாஷினி.

அந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement