• Nov 19 2024

கல்யாணத்திற்கு முன்பே முன்னாள் காதலனுடன் இணைந்து குழந்தை பெற்ற எமி ஜாக்சன்... புதிய காதலனுடன் விரைவில் திருமணம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'மதராசப்பட்டினம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 'ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0' போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.


மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னட படங்களிலும் பட்டையை கிளப்பி வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.


ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே ஜார்ஜும், ஏமி ஜாக்சனும் பிரிந்துவிட்டார்கள். இதன் பின்னர் எமி வாழ்வில் மீண்டும் காதல் வந்தது. அதாவது இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் எட் வெஸ்ட்விக்கும், ஏமி ஜாக்சனும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.


அந்தவகையில் Gossip Girl தொடரில் சக் பாஸாக நடித்து பிரபலமானவர் தான் எட் வெஸ்ட்வி. இவர்கள் இருவரும் லண்டனில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகின்றது.

Advertisement

Advertisement