• Nov 19 2024

எமி ஜாக்சனின் பிறந்தநாள் கொண்டாட்ட க்ளிக்ஸ்! மகனுக்கு என்ன செய்துள்ளார் தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார் எமி ஜாக்சன். அப்படத்தில் வெளிநாட்டுப் பெண்ணாகவே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.  

அதன்பின்னர் தனுஷுக்கு ஜோடியாக தங்கமகன், விஜய்யுடன் தெறி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார். 

திரைப்படங்களில் ஆக்ட்டிவாக இருந்த எமி, ஜார்ஜ் என்பவருடன் காதல் வயப்பட்ட பின்னர் அவருடன் டேட்டிங் செய்து வந்தார். இந்த ஜோடிக்கு திருமணம் ஆகும் முன்பே ஆண் குழந்தையும் பிறந்தது. 



எனினும், திருமணம் நிச்சயம் ஆன நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற வேறொரு ஹாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்து நெருக்கமாக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். 

இந்த நிலையில், தற்போது தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 



Advertisement

Advertisement