• Nov 14 2024

கதாநாயகனாகத் தான் வருவேன் என்று முரண்டு பிடிக்காத நடிகர்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் அண்மைக்கால வரவுகளில் விஜய்சேதுபதி முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக உள்ளார். இவர் நடித்த அண்மைக் காலப் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. விஜய்யுடன் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இவர் காட்டிய வில்லன் நடிப்பு படத்தின் வெற்றிக்குத் துணை செய்தது. சிறுவர் சீர் திருத்தப் பாடசாலையின் மாணவர்களைச் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இவர் பயன்படுத்திய விதமும் விஜய் அதனை முறியடித்துக் கொண்ட விதமுமே படத்தின் முழுக் கதை. விஜய்க்குச் சமனாக விஜய்சேதுபதிக்குக் காத்திரமான பாத்திரம் வழங்கிய இயக்குநர் லோகேஸ் கனகராஜையும் விட்டுக் கொடுத்த விஜய்யையும் பாராட்டத் தான் வேண்டும்.

'கஃபெ ரணசிங்கம்' விஜய்சேதுபதியின் மற்றொரு வெற்றிப் படம். அழகிய கிராமத்தின் கதையைக் கூறி அரபுநாடு ஒன்றுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்லும் விஜய்சேதுபதி அங்கு விபத்து ஒன்றில் அகப்பட்டு இறந்து கொள்கின்றார். அவரது மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவனின் சடலத்தை மீட்பதற்காக உணர்வைத் தொடும் வகையில் போராடுகின்றார். விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்பு இப் படத்தை இறுதி வரையில் தொய்வில்லாமல் ஜொலிக்கச் செய்கிறது.

'கவண்' படம் அவரின் இயல்பான கதாநாயகன் நடிப்பின் இன்னொரு சிகரம் எனலாம். ஊடகத்துறை அரசியலை எவ்வாறு சீரழிக்கிறது. எவ்வாறு காப்பாற்றுகிறது என மாறுபட்ட விதத்தில் சொல்லும் படம். தொடக்கம் முதல் இறுதி வரையில் பரபரப்பாகத் தொய்வில்லாமல் 'கவண்' படம் நகர்கிறது. நம்ம தாடிக்கார நடிகர் ராஜேந்தரும் படத்தின் பிற்பகுதியில் வந்து கலக்குகின்றார். படத்தின் அச்சாணியாக வரும் விஜய் சேதுபதி கதையின் வெற்றிக்கு வலுச் சேர்க்கின்றார்.

இந்த வகையில் கதாநாயகனாகத் தான் வருவேன் என்று முரண்டு பிடிக்காத நல்ல நடிகர் என்றால் அது நம்ம விஜய்சேதுபதி தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement