• Nov 19 2024

சூர்யாவை விட 5 வயது குறைவான நடிகை அவரிற்கு அம்மாவாக நடித்தாரா?..யாராக இருக்கும்…!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த 'கருத்தம்மா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவரே நடிகை ராஜஸ்ரீ. இவர் தமிழில் மட்டுமன்றி பாலிவுட் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியிருக்கின்றார். இவர் 60 இற்கு மேற்பட்ட படங்களிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

தனது அற்புதமான நடிப்பினால் பல விருதுகளை வென்ற இவர் 'சேது', 'நந்தா', 'ரன்', 'மனசெல்லாம்', 'வேட்டையாடு விளையாடு' போன்ற பல உணர்ச்சிபூர்வமான படங்களில் நடித்து மக்கள் மனங்களை வென்றிருக்கின்றார். நடிகைகளை பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட வயது வரைக்கும் மட்டுமே கதாநாயகியாக நடிக்க முடியும். அதனைத் தொடர்ந்து அவர்கள் அம்மா, அக்கா, அண்ணி என்ற கதாபாத்திரங்களில் நடிக்கச் சென்றுவிடுவார்கள்.

இந்த நிலையில் நடிகை ராஜஸ்ரீ 'நந்தா' படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்துள்ளமை பற்றி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றிலே கூறியிருக்கின்றார். அதாவது இவருடைய திரையுலக வாழ்க்கை பற்றி பல கேள்விகளும் இவரிடம் கேட்கப்பட்டிருந்தன. அதில் இவர் நடித்த 'நந்தா' படம் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் இவர் "இப்போது வரைக்கும் சூர்யா என்னுடைய நல்ல நண்பர், மேலும் சூர்யா என்னை விட ஐந்து வயது பெரியவராகவும் இருக்கின்றார். அப்படி இருந்தும் நான் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்திருக்கின்றேன்" எனக் கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமன்றி " நான் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவை அண்ணா என்று கூப்பிட்டால் அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாரு, அப்போது மட்டும் இல்லை இப்போது அண்ணன் என்று கூப்பிட்டாலும் அவரிற்குப் பிடிக்காது" எனவும் கூறியிருக்கின்றார் நடிகை ராஜஸ்ரீ.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement