• Nov 10 2024

ஆரஞ்சு நிற பிகினி உடை... வெடித்தது அரசியல் சர்ச்சை... 'பதான்' படத்திற்கு வந்த அடுத்த சோதனை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'பதான்'. இத்திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதானில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். 


இந்நிலையில், பதான் படத்தின் முதல் பாடலில் தீபிகா படுகோன் காட்டிய கவர்ச்சி சர்ச்சைகளுடன், பாய்காட் சிக்கலையும் இப்படமானது எதிர்கொண்டுள்ளது. அதாவது படு கிளாமராக இறங்கி அடித்துள்ள தீபிகா படுகோன், பாலிவுட் நடிகைகளுக்கு சவால் விட்டுள்ளார். அத்தோடு பீச்சில் பிகினியோடு தீபிகா போட்ட ஆட்டத்தைப் பார்த்து, பாலிவுட்டே ஆடிப் போயுள்ளது.


இவ்வாறான தீபிகாவின் தாராள கவர்ச்சிக்கு சம்பளம் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதுவரை 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த தீபிகா படுகோன் பதான் படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம்.


தீபிகாவுக்கு கேட்ட சம்பளம் கிடைத்ததால் தான், கவர்ச்சியும் தாராளமயக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே தீபிகாவின் கவர்ச்சி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அதுவே தற்போது தாறுமாறாக பாய்காட் சிக்கலில் மாட்டியுள்ளது. 


அந்தவகையில் தீபிகா அணிந்துள்ள பிகினி ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால், அதனை காரணம் காட்டி ஒரு அரசியல் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதனை காரணம் காட்டி பதான் படத்தை உடனடியாகப் புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் 'பாய்காட் பதான்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement