• Sep 20 2024

அனல்பறக்கும் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம்- இதுவரை இத்தனை கோடி வசூலா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க் ஆண்டனி. இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.


படக்குழுவும் படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளனர். ரூ. 60 கோடி பட்ஜெட்டில் மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 15 தேதி திரைக்கு வந்தது.



திரைக்கு வந்த வந்த மார்க் ஆண்டனி 4 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி இருந்தது.நாளுக்கு நாள் இப் படத்தின் வசூல் அதிகரித்து வருகின்றது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் 73 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement