அனந்த் வைத்தியநாதன் என்று சொன்னாலே பலருக்கும் தெரிந்துவிடும். இவர் ஒரு பாடகராகவும், நடிகராகவும், ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்ட வில்லை. எனினும் இவ்வாறுஇருக்கையில் பல வருடங்களுக்குப் பின்னர் youtube சேனல் ஒன்றில் பேட்டி ஒன்று அளிந்துஇருக்கிறார்.
அத்தோடு அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார். அத்தோடு அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் தெரிவித்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இவர் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் முதல் சீசன் ஆரம்பிக்க இவரிடம் எதுவும் கேட்கவில்லையாம். ஆனால் இரண்டாவது சீசனில் இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அதனால்தான் பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக இவர் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் 21 நாட்களில் இவர் இரண்டாவது போட்டியாளராக வெளியேற்ற பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது ஒரு மறக்க முடியாத நினைவு. மனதளவில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்.
அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் அதிகமான நாட்கள் இருக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இருந்த நாட்களை மறக்க முடியாது. அத்தோடு மனதிற்கு இது ஒரு பெரிய மெடிசின். யாருக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு அப்படித்தான். வெளி உலக தொடர்புகள் இல்லாமல் இருந்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியையும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு மன சம்பந்தமான விளையாட்டு தான் இது.
அதுபோல பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரபலமாக பேசப்பட்டு கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அப்படியே காணாமல் போய்விடுவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்துவிடும் வாழ்க்கை மாறிவிடும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சும்மா பொய் என்று தான் கூற வேண்டும். நம்முடைய திறமை இருக்க வேண்டும், அதற்கேற்ற உழைப்போடு நம்முடைய பயணம் தொடர்ந்து கொண்டால்தான் நமக்கு வாய்ப்பும் கிடைக்கும்.
நீங்களே சொல்லுங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் வெற்றி பெற்றவர்கள் யாராவது நல்ல நிலைமையில் இருக்கிறார்களா? பிக் பாஸில் இருக்கும்போது தான் மக்களுடைய மரியாதையும் ஆதரவும் அதிகமாக இருக்கும் அதற்கு பின்னர் அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள் .இப்போது பிக்பாஸில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கூட இதை மனதில் ஏற்றுக்கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
Listen News!