• Sep 21 2024

விவாகரத்துக் கிடைத்ததை தனது கணவருடன் குலோப் ஜாமூன் கொடுத்து கொண்டாடிய அனேகன் பட நடிகை- இது என்ன புதுசா இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தான் லினா. இவர்  அனேகன், திரௌபதி, கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் தமிழைத் தவிர மலையாளத்திலும் அதிக படங்கள் நடித்துள்ள இவர் கடந்த 2004ம் ஆண்டு அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013ம் ஆண்டு அவரைப் பிரிந்தார்.


இதனைத் தொடர்ந்து தனித்து வாழும் இவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசும்போது, 6ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி மாணவன் ஒருவரை விரும்பினேன், பின் அவரையே திருமணம் செய்தேன்.


நீதிமன்றத்தில் இருந்து விவாகரத்து செய்தி கிடைத்ததும் நாங்கள் இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டு அதனை கொண்டாடினோம் என அவர் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.



Advertisement

Advertisement