• Sep 21 2024

ஆண் நண்பர்களுக்கு நடுவில் நெருக்கமாக அனிகா... இந்த வயசிலும் இப்படியா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வந்தார்.


அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். 

அதுமட்டுமல்லாது மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா தான் நடித்திருப்பார்.


அத்தோடு என்னை அறிந்தால் படத்திலும் நடிகர் அஜித்குமார், திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஆண் நண்பர்களுக்கு நடுவில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்த வயசிலும் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றத் தொடங்கி விட்டீர்களா..? எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement