• Sep 20 2024

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் அனிகா..! யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் என்பதும், இவர் ஏற்கனவே ’வேலன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வேலன்’ இயக்குனர் கவின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முகின் தான் ஹீரோ என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். 

சென்னை, நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார்.

இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது என்றும் ஃபேமிலி சென்டிமென்ட் அம்சங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஷா சரத், ஆதித்யா கதிர் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.



Advertisement

Advertisement