தமிழ் திரையுலகில் மூன்று என்னும் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் இளம் இசையமைப்பாளர் அனிரூத்.இவர் இசையமைத்திருந்த காத்துவாக்கில ரெண்டு காதல் பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் இறுதியாக வெளியாகியிருந்தன. இப்படங்களில் வெளியான பாடல்கள் அனைத்தும சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர அஜித் 62 மற்றும் ரஜினி 169 ஆகிய படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.
அதுமட்டுமின்றி தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் .
இந்த நிலையில் முதல் முறையாக அவர் மலையாள திரையுலகில் உருவாகும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹனிப் அதேனி என்பவர் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய படத்தில் அனிரூத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் பணியில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!