மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.இப்படத்தில் பகத் பாசில், சூர்யா ,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
பொதுவாக வெளிநாடுகளுக்கு ஒரு படத்தின் பிரதியை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே அனுப்பிவிடுவார்கள். ஆனால், படத்தின் இசை வேலைகளை இசையமைப்பாளர் அனிருத் இன்னும் முடிக்கவில்லையாம். ஒரு படத்திற்கு பின்னணி இசை என்பது உயிரோட்டமாக அமைய வேண்டும்
தன்னுடைய இசையை இயக்குநர்கள் திருத்தம் செய்வதை அனிருத் விரும்பவில்லையாம். பட வெளியீடு வரை படத்திற்கு பின்னணி இசை அமைத்தால் கால நெருக்கடியின் காரணமாக இசையில் இயக்குநர்கள் எந்தத் திருத்தத்தையும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அதை உடனடியாக செய்து முடிக்க முடியாது. எனவேதான் அனிருத் இப்படி கடைசி நேரம் வரை இழுத்தடிப்பதாகச் சொல்கிறார்கள்.
படத்திற்கான பின்னணி இசை தாமதம் ஆவதில் கமல்ஹாசனும் டென்ஷனாகவே உள்ளாராம். படத்தின் பிரமோஷனுக்காக வெளியூர்களில் சுற்றிக் கொண்டிருப்பவர், அடிக்கடி இது பற்றிய அப்டேட் கேட்பதால் படக்குழுவினரும் டென்ஷனாகவே இருக்கிறார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!