• Sep 20 2024

டிடிஎஃப் வாசனுடன் கூட்டணி சேர்ந்த அனிருத்..? அதுவும் இந்த சம்பவத்துக்காகவா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் வாசன். இவர் தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

டிடிஎஃப் வாசன் எவ்வளவுக்கு எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைக்கும் பஞ்சமில்லை  மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வாங்கிக்கொடுக்கும்படி வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் அண்மையில் பச்சைக் குத்திக்கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க இவரது பேச்சு தான் இருந்தது.

இந்நிலையில்  படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். செல்அம் என்பவர் இயக்கும் படத்துக்கு மஞ்சள் வீரன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தை தி பட்ஜ்ரெட் பிலிம் கம்பெனி தயாரித்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வாசன் பிறந்தநாளான கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது.

 இந்நிலையில் மஞ்சள் வீரன் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் டிடிஎஃப் வாசனுக்கான அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடவிருப்பதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement