கடந்த ஜூன் 9ம் தேதி காலை 10 மணியளவில் திரை நட்சத்திரங்கள் பங்கேற்க பிரம்மாண்டமான முறையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோலாகலமாக மகாபலிபுரம் அருகே உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. சிகப்பு கலர் சேலையில் செழிப்பான அழகுடன் நயன்தாரா மணமகளாக மேடையை அலங்கரிக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையில் மாஸ் காட்டினார்.
நயன்தாரா கழுத்தில் திருமாங்கல்யம் ஏறிய புகைப்படத்தை அப்போதே வெளியிட்டு இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். திருமணம் முடிந்த மறுநாள்திருப்பதி ஏழுமலையானை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் சாமி தரிசனம் செய்தனர்.
பிறகு கொச்சிக்கு சென்று அம்மாவை சந்தித்தார் நயன்தாரா. அங்கே விருந்து முடித்த இருவரும் பின்னர் ஹனிமூனுக்காக தாய்லாந்து பறந்து சென்றனர். நயன் மற்றும் விக்கியின் ஹனிமூன் ரொமான்ஸ் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வந்தார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டால்மென்ட் முறையில் தனது திருமண புகைப்படங்களை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். தற்போது இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கமல், விஜய், அஜித் மூன்று பேரையும் சேர்த்து கட்சி அமைக்கணும்- பரபரப்பை ஏற்படுத்திய கங்கை அமரன்
- பச்சை மற்றும் சிவப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கும் குக்வித் கோமாளி அம்மு அபிராமி- செம கியூட்டாக இருக்கிறாங்களே
- ‘கோப்ரா’ படத்தின் பாடல் லிஸ்ட் வெளியீடு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- மணிரத்னம் வேட்டி அணிந்து வர வேணாம் என்றாரா?..புதுப் புரளியை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்
- வடிவேலு படத்தின் முதலாவது சிங்கிள் வெளியீடு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!