பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.என்பது நாம் அறிந்ததே.
முதல் பட்டத்தை வென்ற அசீமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது. இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர்.
இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் விக்ரமன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் `தான் பிக் பாஸ் வீட்டில் வெற்றியடைய முடியாத காரணத்தையும் சில உண்மைகளை பற்றியும் பேசியிருந்தார். இப்படி பேசுகையில் பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான அனிதா சம்பத் போன் செய்து பிக் பாஸில் வெற்றியடையாததற்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.
இப்படி அனிதா கூறியது அங்குள்ள ரசிகர்களுக்கு மட்டுமல்ல விக்ரமனுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை ஆதரித்த பலரில் அனிதாவும் ஒருவர் ஆவர்.
பின்னர் அனிதா ஏன் உங்களை பெண் ரசிகரக்ள் விக்கு என்று அழைக்கின்றனர் “இது என்ன மாமா குட்டி போன்றதா என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்ரமன “விக்கு என்று என்னுடைய வீட்டில் உள்ள ராம் தான் பெயர் வைத்தார். பின்னர் அனைவரும் அப்படியே கூப்பிட தொடங்கினர். பின்னர் நீங்கள் வெற்றியடையாத காரணத்தினால் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் எந்த அளவிற்கு பேசியிருந்தீர்கள் என்பது தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது என்று கூறினார் அனிதா சம்பத்.
பிக் பாஸிற்கு வெளியில் PR என்பது எந்த அளவிற்கு உதவி செய்கிறது என மக்கள் அறிந்து கொண்டனர் என கூறிய அவர் “பெண்களுக்கு பொதுவாகவே பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பொதுவாக கோபம் என்பது எல்லோருக்கும் சமமானது. ஆனால் அதனை ஒரு பெண் செய்யும் போது “ஒருவேளை கல்யாணம் ஆகாத பெண்ணை இருந்தால் “இதையெல்லாம் யார் கல்யாணம் செய்வார்கள் என்று கூறுவார்கள், அதே கல்யாணம் ஆனா பெண்ணாக இருந்தால் இந்த பொண்ணு கூட எப்படி கணவன் வாழ்வான் என்று கேட்பார்கள்.
இந்த விஷயத்தை நானும் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் அவரை கதாநாயகன், ராடு பாய், கெத்து என அங்கீகாரம் கொடுக்கின்றனர் என்று தன்னுடைய ஆதங்கத்தை முழுவதுமாக கொட்டி தீர்த்தார் அனிதா.
இதனையடுத்து பேசிய விக்ரமன் ஆமாம் இது உண்மைதான். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கூட ஜி.பி.முத்து ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். பெண்ணாக இருந்து கொண்டு பாத்திரம் கழுவ தெரியாத என்று. அதற்கு நான் பெண்ணாக இருந்தால் இதை செய்யவேண்டுமா? என கேட்டேன். இப்படி பேசுபவர்கள் அதிகமாக இருகின்றனர் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி யாராவது பேசினால் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கிடையாது என கூறினார். இதற்கு அங்குள்ள மக்கள் ஆராவாரம் செய்து விக்ரமனை பாராட்டிக் கொண்டாடினர் .
Listen News!