இயக்குநர் ராமால், 'கற்றது தமிழ்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அந்த வகையில் இவர் நடித்த, அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறினார்.மேலும் இவரது புசு புசு உடல் தோற்றம் பல ரசிகர்களை கவர்ந்தது. எனினும் சில பட வாய்ப்புகள் இவரது கையை விட்டு நழுவியதால், உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகி தோற்றத்திற்கு மாறினார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இதனிடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்த இவர் இப்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வலம் வரும் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி என்கின்றனர்.
Listen News!