• Nov 14 2024

இப்படி சொதப்பீட்டிங்களே அண்ணாச்சி... முதலுக்கு ரொம்ப மோசம் ஆச்சே... எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா...?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்துக்கு காலம் பல புதிய படங்கள் வெளியாகுவது மட்டுமல்லாமல் பல புதுமுக ஹீரோக்களும் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். இவ்வாறாக வெளியான படங்களில் கடந்த மாதம் பரபரப்பாக பேசப்பட்ட படம் என்றால் அது 'தி லெஜண்ட்' திரைப்படம் தான். இப்படத்தின் வாயிலாக சரவணன் ஸ்டோர் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார்.


மேலும் இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே நடித்து மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட இவர் அவ்விளம்பரங்களின் மூலம் தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமான முறையில் எடுத்திருந்தார் சரவணன்.


அதுமட்டுமன்றி இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளையும் பிரம்மாண்டமான முறையில் மேற்கொண்டிருந்தார் சரவணன். அத்தோடு இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட்டிருந்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய், ரஜினி ஆகியோரின் படங்களுக்கு இணையாக உலகமெங்கும் 2500 இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டு அதகளப்படுத்தியிருந்தார்.


இவ்வாறாக 'தி லெஜண்ட்' என்ற இந்தப் படம் எடுத்தது முதல் வெளியிட்டது வரை பிரம்மாண்டமாக பல விடயங்களையும் பார்த்துப் பார்த்து செய்த சரவணனுக்கு இப்படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கத் தவறி உள்ளது.  அதாவது இப்படம் மொத்தமாக ரூ.12.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.


இந்த நிலையில் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.12.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால் முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணனுக்கு ரூ.30 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு தனது முதல் படத்திலேயே படு தோல்வியை சந்தித்திருந்தாலும் சரவணன் சோர்ந்து விடாது அடுத்த படத்திற்கு ரெடி ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Advertisement

Advertisement