• Sep 20 2024

பல கோடிகளை லாபமாக பெற்ற 'தி லெஜண்ட்' படம்... அறிவிப்பை வெளியிட்ட அண்ணாச்சி... ஆடிப்போன ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தின் முக்கிய வணிகஸ்தர்களில் ஒருவராக வலம் வருபவர் சரவணன் அருள். சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளரான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா போன்ற முன்னணி கதாநாயகிகளோடு இணைந்து நடித்து வந்தார். 

அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அந்தவகையில் 'தி லெஜண்ட்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றார். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக இயக்கியுள்ளனர்.

மேலும் இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா நடித்திருக்கின்றார். இதற்காக இவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டு வழங்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உலகமெங்கும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடபட்டிருந்தது. அத்தோடு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் போல் இப்படத்திற்கும் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது.


இவ்வாறாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப்படம் ஆனது வெளியான நாள் முதல் கடுமையான விமர்சனங்களையே சந்தித்து வந்திருந்தது. அதாவது சரவணனுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை என்றெல்லாம் கூறி கிண்டலடித்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் வெளியான முதல் வாரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாகத் தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பெருமளவிற்கு பேச்சுக்களும் எழுந்திருந்த.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான சரவணன் தற்போது தன்னுடைய முதல் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டு அனைவரையும் மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கின்றார். அதாவது 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படமானது திரையரங்குகள் மூலமாக மட்டும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ.20 கோடிக்கும், ஓடிடி உரிமையை ரூ.25 கோடிக்கும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தவகையில் பார்த்தால் 'தி லெஜண்ட்' திரைப்படம் ஆனது ரூ.45 கோடி லாபம் ஈட்டி இருப்பதாக கூறப்படுகின்றது.


இவரின் நடிப்பினைக் கிண்டல் மற்றும் கேலிக்கு உள்ளாக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வசூல் அமைந்திருப்பதாக இவரின் ரசிகர்கள் கூறுவதோடு அவருக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement