இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் குழுமம் கடந்த காலாண்டில 333 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இந்த நஷ்டத்தை குறைக்கும் முயற்சியாக பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள 50 திரையரங்குகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.
பிவிஆர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இதேபோல் ஐநாக்ஸ் திரையரங்குகளும் இந்தியாவில் அதிக அளவில் உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் கடந்த பிப்ரவரி மாதம் இணைந்தன.எனினும் இதன்படி பிவிஆர் நிறுவனத்துடன் ஐநாக்ஸ் குழுமம் இணைந்த பின்னர் பிவிஆர் - ஐநாக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,
இந்த நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.333 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.
அதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ. 16.1 கோடி லாபமும், அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.105 கோடி நஷ்டமும் பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருந்தது.
நான்காவது காலாண்டில், செயல்பாடுகளின் வருவாய் இருமடங்காக அதிகரித்து, ரூ.1,143 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.536 கோடியாக இருந்தது . 333 கோடி நிகர இழப்பை பிடிஆர் சந்திக்க, பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி, ஓடிடி தளங்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
மேலும் தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் 50 திரையரங்குகளை அடுத்த ஆறு மாதங்களில் மூட இருப்பதாக பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 50 திரையரங்குகளால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாகவும், இந்த காலாண்டில் மட்டும் சுமார் 105 கோடி நிகர இழப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேநேரம் லாபம் அதிகம் வரும் பகுதிகளில் 2024 நிதியாண்டில் மேலும் 150-175 திரையரங்குகளை (முக்கியத்துவம் அடிப்படையில்) திறக்க PVR INOX திட்டமிட்டுள்ளது.
"கடந்த சில மாதங்களாக பாக்ஸ் ஆபிஸில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அடுத்த இரண்டு முதல் மூன்று காலாண்டுகளில் இந்தப் போக்கு சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று PVR INOX நிறுவனம் தங்கள் இழப்பு குறித்து தெரிவித்துள்ளது.
Listen News!