• Sep 20 2024

Bigg boss-7 இல் களமிறங்கவுள்ள மற்றுமோர் பிரபலம்... அப்போ அவருக்குப் பதிலாக இவர் தான் வாறாரா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. சமீபத்தில் இந்த சீசனுக்காக கமல் நடித்த பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது.

இதனைத் இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் தான் இருக்கின்றது. நாளுக்கு நாள் ஒவ்வொருவருடைய பெயர்களும் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன. 


அந்தவகையில் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் அல்லது அவரிற்குப் பதிலாக செய்தித் தொகுப்பாளர் முபாஸிர் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே யார் வருகிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement