தென்னிந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஜோடி என்றால் அது நம்ம நயன்-விக்கி ஜோடி தான். அதாவது நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9-ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களின் திருமணமானது மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றிருந்தது. இத்திருமணத்திற்கு பின் இருவரும் ஜாலியாக வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று வந்தனர். அதன்பின்பு தங்களது படங்களின் வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் மீண்டும் இரண்டாவது ஹனிமூனுக்கு சென்றுள்ளார்கள்.
அங்கிருந்து இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் செம ரொமாண்டிக்கான புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்குப் போட்டியாக மற்றொரு நட்சத்திர ஜோடி தற்போது ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்குப் பறந்த நிலையில், ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இவர்களும் பதிவு செய்து வருகிறார்கள்.
அவர்கள் வேறு யாருமில்லை நம்ம நிக்கி கல்ராணி - ஆதி தம்பதியினர் தான். இவர்கள் தற்போது பாரிஸுக்கு தங்களது 100 ஆவது திருமண நாளை கொண்டாட சென்றுள்ளனர்.
அங்கிருந்து ஜோடியாக இருவரும் எடுத்துக்கொள்ளும் அழகிய ரொமான்டிக் புகைப்படங்களை நயன்-விக்கி ஜோடியை போலவே தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியும் வருகின்றன.
Listen News!