நடிகர் சூரியை வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் தான் விடுதலை. இதில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வருகின்றார்.
சமீபத்திய தகவலின் படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை படத்தில் மூத்த இயக்குநர் ராஜீவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு பெரிய சண்டைக் காட்சி இரண்டாம் பாகத்தில் நிலுவையில் உள்ளது. அதை ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இயக்கவிருக்கிறார்.ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சூரி கதாநபயகனாக நடிக்கும் முதல் படம என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது எனலாம்.
Listen News!