• Nov 17 2024

சூப்பர் ஸ்டார் வீட்டில் மேலும் ஒரு விவாகரத்து: 24ஆண்டுகள் வாழ்ந்து விட்டு வேறொருவருடன் காதலா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காதல் திருமணம் செய்த பிரபல ஜோடி பிரிந்துவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் 24 ஆண்டுகள் கழித்து பிரிந்திருக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானின் தம்பியும், நடிகருமான சொஹைல் கானும், ஃபேஷன் டிசனைரான சீமா கானும் பிரிந்துவிட்டார்கள். 1998ம் ஆண்டு முதலில் இருவரும்  சந்தித்தார்கள். இதன் பின்னர் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.



விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்லும் முன்பே சில காலமாக பிரிந்து வாழ்ந்தார்கள். விவாகரத்து குறித்து சீமா கூறியதாவது, நான் நெகட்டிவிட்டியை விட்டுவிட்டேன். தற்போது வாழ்க்கையை பாசிட்டிவாக பார்க்கிறேன். நான் யார், இது தான் என் குடும்பம், என் பெற்றோர், என் குழந்தைகள், உடன் பிறப்புகள் என்று மக்களுக்கு தெரிந்தால் போதும் என்று கூறியுள்ளார்.



அத்தோடு சொஹைல் கானை பிரிந்த பின்னர் சமூக வலைதள கணக்குகளில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கானை நீக்கிவிட்டார் சீமா. மேலும்  இது சல்மான் கான் வீட்டில் நடந்திருக்கும் இரண்டாவது விவாகரத்து ஆகும். 


எனினும் முன்னதாக சல்மானின் மற்றொரு தம்பியான நடிகர் அர்பாஸ் கானும், நடிகை மலாய்கா அரோராவும் விவாகரத்து பெற்றனர். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்தார்கள்.



அர்பாஸ் கானை பிரிந்த மலாய்கா, மகன் அர்ஹானை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். அத்தோடு மலாய்கா அரோரா தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் தான் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement