• Sep 20 2024

தளபதி 68 படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகர்- அடடே இவர் சூப்பர் நடிகராச்சே....

stella / 11 months ago

Advertisement

Listen News!

லியோ படத்தின் ஹைப்பே இன்னும் தனியாத நிலையில், தளபதி 68 திரைப்படம் குறித்த அறிவிப்பும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.

இதில்,ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாத், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். இதனால் ரசிகர்களின் 13 ஆண்டு கால ஏக்கம் நிறைவடைந்துள்ளது.


இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் விரைலில் வெளியாகும் என்றும் ரசிகர்களால் நம்பப்படுகின்றது.இந்த நிலையில் இப்படத்தில் தற்பொழுது மற்றுமொரு முன்னணி நடிகரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அவர் வேறுயாரும் இல்லை நடிகர் ஜெயராம் தானாம். இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். எனவே மீண்டும் இவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement