தமிழ் சினிமாவில் அந்த ஆண்டு முழுவதும் திரையுலகைச் சேர்ந்த பலரும் திடீரென இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஒருவர் இறந்த செய்தி ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகின்றது.
அதாவது இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் மாயி சுந்தர்.
இவர் இதனைத் தொடர்ந்து தொடர்ந்து விக்ரமின் ஸ்கெட்ச் விஷ்ணு விஷாலின் குள்ளநரிக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இது தவிர பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இன்று அதிகாலை இறப்புக்குள்ளாகியுள்ளார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!