தமிழில் 'தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை' போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் 'மாமனிதன்'. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, குருசோமசுந்தரம், சாஜி, லலிதா மற்றும் அனிகா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
வித்தியாசமான கதையம்சத்துடன் உருவான இப்படமானது இந்தோ பிரெஞ்ச் சர்வதேச திரைப்பட விழா மற்றும் டோக்கியோ திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வென்றிருக்கின்றது. அத்தோடு புனேவில் நடந்த, கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழையும் பெற்று சாதனை புடைத்திருந்தது.
அதுமட்டுமல்லாது ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருது இப்படத்தில் நடித்த நடிகை காயத்ரிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்படி பல அங்கீகாரங்களைப் பெற்ற 'மாமனிதன்' படத்திற்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது ஏப்ரல் 20 முதல் 27 வரை ரஷ்யாவில் நடைபெறும் 45-ஆவது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரையிடப்பட உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்காக மதிப்புமிக்க திரைப்பட விழாக்குழுவானது மாமனிதன் திரைப்பட தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சீனு ராமசாமி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை தற்போது சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Listen News!