தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் படிக்க நினைக்கும் ஒரு புத்தகம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகம் 1954ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அப்போதில் இருந்து இந்த பொன்னியின் செல்வன் கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் தமிழ் சினிமாவிலும் இந்த கதையை படமாக எடுக்க வேண்டுமென முயற்சி செய்தவர்கள் பலர் உள்ளார்கள்.
ஆனால் இப்போது அந்த கதையை கடைசியில் மணிரத்னம் அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.மேலும் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி செம வைரலானது.
இவர் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மேக்கிங் ஆப் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
எனினும் இந்த நிலையில், சோழர்களின் காலம்தான் தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் வரலாற்றாரிசியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், போன்றோ சோழர்கள் பற்றிய பெருமையளைக் கூறும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கும் புலி திரைப்படத்திலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- திடீரென வளைக்காப்பை நிறுத்திய சோனம் கபூர்; வெளியானது காரணமாம்!
- தொகுப்பாளினி ஜாக்குலினா இது-வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா இத்தனை கோடி சம்பளமாக வாங்கியுள்ளாரா..?
- ஆலியா பட்டுக்கு இரட்டை குழந்தைகளாம்-ரன்பீர் கூறிய சுவாரஷ்ய தகவல்கள்..!
- இது நம்ம கானா பாடகி இராஜலட்சுமியா…மொடேர்ன் உடையில் கலக்கலாக வெளிவந்த வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!