இயக்குநர் H வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்னள திரைப்படம் தான் துணிவு. இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா, அமீர், சிபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்த நிலையில், விஜய் டிவி பிரபலமான தங்கதுரையும் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி துணிவு படத்தில் இயக்குனர் எச். வினோத்துடன் இருக்கும் புகைப்படத்தை தங்கதுரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் துணிவு படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி H.வினோத் சார். என்னோட ரியல் இன்ஸ்பிரேஷன் தல" என குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!