• Sep 21 2024

விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் லத்தி படத்தின் Antecedent டீஸர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படமாக லத்தி உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் லத்தி படம் வெளியாகவுள்ளது.

டிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடவா போன்ற படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் லத்தி.

மேலும் இப்படத்தை ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. பின்னர் கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

லத்தி படத்தில் மீண்டும் ஒரு சண்டைக் காட்சி சென்னையில் நடைபெற்று வருகின்றது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்பதால், இரவு பகலாக சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்தின் பட Antecedent டீஸர் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement