• Sep 20 2024

தொகுப்பாளருடன் நெருக்கம் காட்டும் 'எதிர்நீச்சல்' ஜனனி... இந்தம்மா ஏய் உனக்குத்தான் சக்தி இருக்கார்ல... வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் அசைக்க முடியாத சாதனைப் படைத்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இவருடைய அசத்தலான நடிப்பிற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.


இந்நிலையில் இவர் தற்போது தொகுப்பாளர் அஷ்வத்துடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்தாம்மா ஏய் உனக்குத்தான் சக்தி இருக்காரெல்லோ" என குணசேகரன் பாணியில் கேட்டு கிண்டலடித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement