தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இவர் மலையாள மொழியில் வெளியாகி இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்றிருந்த 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
எனினும் தமிழ் சினிமாவில் அரசியலை மையமாக கொண்டு தனுஷ் நடித்திருந்த 'கொடி' என்ற திரைப்படத்தின் மூலம் அப்படத்தில் இடம்பெற்ற இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமாகியிருந்தார்.இவர் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்திகேயா 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டார்.
அத்தோடு “இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடந்த போது எனக்கு அடிபட்டது. அதனால் என்னால் இறுதிநாள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதற்கான நான் இயக்குனரிடம் இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Listen News!