கடந்த 2015ஆம் ஆண்டு பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.இப் படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
அத்தோடு , நீண்ட இடைவெளிக்கு பின்னர் அனுபமா தமிழில் சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதுவும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குநர் ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனுபமா நடித்த படம் ரவுடி பாய்ஸ். முற்றிலும் கல்லுரி கதை களத்தை மையமாக கொண்ட படம்.
இந்த படத்தை இயக்குநர் ஹர்ஷா கொனுகன்டி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக அனுபமா நடித்திருக்கிறார். மேலும் இதை தொடர்ந்து தற்போது அனுபமா அவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
இதனிடையே நடிகை அனுபமா பரமேஸ்வரனும் கிரிக்கெட் வீரர் பும்ராவும் நெருங்கி பழகுவதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது . ஆனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் இல்லை என்று அனுபமா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அனுபமா காதலிக்கும் நபர் குறித்த தகவல் சமூகவலைத்தளத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அனுபமா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இப்போது தனியாக இல்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என்று கூறி தான் காதலிக்கும் நபர் குறித்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார் அனுபமா. எனினும் தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சினிமா பிரபலமா? பிசினஸ்மேனா? யார் என்று கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- திருமணம் நடக்காமல் இருக்க இவர்கள் தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி..!
- தெலுங்கில் பிஸியாகும் நயன்தாரா -ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!
- தீடீரென ரசிகர்களுக்கு ஷாக் விசயத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
- மறுபடியும் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் அட்லீ-ஆதாரத்துடன் வெளியான விபரம்….!
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- நயன்தாராவின் திருமணத்தை படமாக இயக்கவுள்ள இயக்குநர் கௌதம் மேனன்- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு
- தளபதியின் மார்க்கெட்டை முறியடித்த கமல் ஹாசன்- கடந்த காலங்களில் நடக்காத வசூல் சாதனை
- ‘அவரை கட்டிப்பிடித்த போது தலைல இருந்து கால் வரைக்கும் ஒரு நல்ல பீலிங் உருவாச்சு’- விஜய்யின் தாயார் உருக்கம்
- பாடகர் கே.கே யின் மரணத்துக்கான காரணம் பற்றி மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!